தேவையான பொருட்கள்
மஷ்ரூம் - 200 கிராம்
குடைமிளகாய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
வெண்ணை - ஒரு மேசை கரண்டி
மசாலாவிற்கு தேவையானவை
தயிர் - ரெண்டு மேசை கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
கடலை மாவு - ஒரு மேசை கரண்டி
உப்பு - தேவையான அளவு
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
செய்முறை
மசாலாவிற்கு குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் போல் தயார் செய்யவும் காளானை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும் .
குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சதுர துண்டுகளாக நறுக்கி எடுக்க வேண்டும் தயார் செய்துள்ள மசாலா கலவையில் நறுக்கி வைத்துள்ள காய்களை சேர்த்து நன்றாக புரட்டி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
இரண்டு மணி நேரம் கழித்து ஒன்றன்பின் ஒன்றாக மாற்றி மாற்றி கிரில் குச்சியில் அல்லது மரக் குச்சியில் சொருகி வைக்கவும்.
தயார் செய்த குச்சிகளை கிரில் பேன் அல்லது சாதாரண தோசை கல்லில் வைத்து கொஞ்சமாக வெண்ணை தடவி நாலா பக்கமும் திருப்பி வைத்து சுட்டு எடுத்தால் சுவையான மஸ் ரூம் டிக்கா தயார்.