ரோஸ் குல்கந்து

kuttybabuPPT
0
ரோஸ் குல்கந்து

தேவையானவை

பன்னீர் ரோஜா இதழ்கள், சர்க்கரை - தலா கால் கிலோ 

சிட்ரிக் ஆசிட் பொடி - அரை ஸ்பூன்

 ராேஸ் எசன்ஸ் - சில துளிகள் 

தேன் - ஒரு ஸ்பூன் 

செய்முறை

ரோஜா இதழ்களை சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று விட்டு எடுக்கவும் .

மிகவும் வலுவலுப்பாக அரைக்க வேண்டாம்.

 ரோஜா விழுதை அகலமான பாத்திரத்தில் கொட்டி சர்க்கரை சேர்த்து மெல்லிய துணியால் மூடவும்.

 அதை அப்படியே வெயிலில் நான்கு நாட்கள் வைக்கவும்.

 சர்க்கரை நன்றாக கரைந்து வரும்போது சிட்ரிக் ஆசிட் தேன் ரோஸ் எசன்ஸ் கலந்து சுத்தமான பாட்டிலில் நிரப்பி ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

 குறிப்பு

இந்த குல்கந்தை பீடா செய்யும்போது உபயோகிக்கலாம்.

 உள்ளே ஸ்டஃபிங்காக வைத்து சமோசா போல் செய்யலாம்.
 மேலாக ஐஸ்கிரீம் சேர்த்து சாப்பிடலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)