பேபி கார்ன் சூப்

kuttybabuPPT
0
பேபி கார்ன் சூப்

தேவையானவை

 பேபி கான் - ரெண்டு 

உதிர்த்த ஸ்வீட் கார்ன் - அரைக்கப்

 பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கிராம்பு, ஏலக்காய் - தலா ஒண்ணு

கருவேப்பிலை - ஒரு துணுக்கு

 மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை 

பருப்பு வேக வைத்த தண்ணீர் - இரண்டு கப் 

எண்ணெய் - ஒரு டீஸ்பூன் 

சோம்பு, சீரகம், மிளகு - தலா அரை டீஸ்பூன் 

உப்பு - அரை டீஸ்பூன்

 பால் - ஒரு டேபிள் ஸ்பூன் 

செய்முறை 

பேபி கார்னை வட்ட வட்டமாக நறுக்கவும் .

வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும் .

பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

 பிரஷர் பாண்ணில் எண்ணெய் காய வைத்து சோம்பு, சீரகம், மிளகாய் போடவும்.

 பின்னர் கிராம்பு, ஏலக்காயை சேர்க்கவும்.

 அனைத்தும் பொரிந்ததும் கருவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், பேபி கார்ன், ஸ்வீட் கார்ன் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

 பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், பருப்பு வேக வைத்த தண்ணீர், உப்பு சேர்த்து மூடவும்.
 ஒரு விசில் வந்ததும் இறக்கி ஒரு டேபிள் ஸ்பூன் பாலை கலந்து சூடாக பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)