பக்கோடா குழம்பு

kuttybabuPPT
0
பக்கோடா குழம்பு
தேவையானவை 

வெங்காய மெது பக்கோடா - 50 கிராம்

 தேங்காய் பால் - ரெண்டு கப் 

சோம்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி - தலா ஒரு டீஸ்பூன் 

பட்டை - சிறிய துண்டு 

உரித்த சின்ன வெங்காயம் - 15

 தக்காளி - இரண்டு 

பச்சை மிளகாய் - 3 

மஞ்சள் தூள், தனியா தூள் தலா - 1/4 டீஸ்பூன் 

நல்லெண்ணெய், கருவேப்பிலை - சிறிதளவு 

உப்பு - தேவைக்கு 

செய்முறை 

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு, பட்டை, கருவேப்பிலையை போட்டு தாளிக்கவும் .

பின்னர் நறுக்கிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் , தக்காளி , உப்பு சேர்த்து வதக்கவும்.

 மஞ்சள் தூள், தனியா தூள், தேங்காய் பால் சேர்த்து அடுப்பை மிதமான தனலில் வைத்து கொதிக்க விடவும்.

 இறுதியாக பக்கோடா துண்டுகளை சேர்த்து கிளறி இறக்கி பாத்திரத்தை மூடி வைக்கவும் .
15 நிமிடங்கள் கழித்து பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)