சமையல் குறிப்புகள்

kuttybabuPPT
0
சமையல் குறிப்புகள்

வாழைக்காய், உருளைக்கிழங்கு இவற்றை தோல் நீக்காமலேயே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.

 அவற்றின் தோல்களால் ஏற்படும் வாய்வுக்கு நல்ல மருந்தாகும்.

 தேங்காய் சாதம் கிளறும் போது அதிலிருந்து அப்பளங்களை பொறித்து நொறுக்கி போட்டு கிளறவும் .

சாதம் பார்க்க கலர்ஃபுல்லாகவும், பேஸ்ட் ஆகவும் இருக்கும்.

 வாழைப்பூவை அறியும்போது கையில் சிறிது உப்பை தடவிக் கொண்டு அரிந்தால் கை பிசுபிசுப்பாகாது.

 உருளைக்கிழங்கு வேகவைக்கும் நீரில் நான்கு அல்லது ஐந்து சொட்டு சமையல் எண்ணெய் விட்டால் உருளைக்கிழங்கு எளிதில் வெந்து விடும் .

பயிர் வகைகளை எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து ஹாட் பேக்கில் மூடி வைத்து மறுநாள் திறந்து பார்த்தால் முளைகட்டிய தானியம் தயார் .

பெருங்காய கட்டியை சுலபமாக எடுக்க அதில் ஒரு பச்சை மிளகாயை கீறி போட்டு மூடி வைக்கவும்.

போண்டா மாவுடன் சிறிது சீஸ் துருவல் சேர்த்து போண்டா செய்தால் மிருதுவாகவும், சுவை கூடுதலாகவும் இருக்கும் .

போண்டா நன்கு உப்பி பெரியதாகவும் வரும் .

சேமியா பாயாசம் நீர்த்து விட்டதா கொஞ்சம் நூடுல்ஸை சூடான நீரில் போட்டு ஐந்து நிமிடம் கழித்து வடிகட்டி அந்த நீரை பாயாசத்துடன் கலந்தால் கெட்டியாகும். மணமும் , சுவையும் நன்றாக இருக்கும் .

பன்னீர் தயாரிக்க கொதிக்கும் பாலில் எலுமிச்சை சாறுக்கு பதிலாக தயிர் சேர்த்தால் கூடுதலாக பன்னீர் கிடைக்கும் .

இரண்டாவது முறை அரிசி கலைந்த நீரில் பருப்பை வேக வைத்தால் சாம்பார் நல்ல ருசியாக இருக்கும்.

 சுக்கை வறுத்து பொடி செய்து சலித்து வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு தயிர் சாதம் ஊட்டும் போது சிட்டிகை கலந்தால் புளிப்பு தட்டாமல் எளிதில் ஜீரணம் ஆகும்.

 காய்கறிகளை நறுக்குவதில் கூட உணவிற்கு சுவை ஏற்படும்.

 உதாரணமாக கத்திரிக்காயை சாம்பாரில் நீளமாக அறிந்து போட வேண்டும். காரக்குழம்புக்கு நீளவாக்கில் நறுக்கி பின் குறுக்காக நறுக்கி போட வேண்டும் .

வேகவைத்த மரவள்ளிக்கிழங்கின் ரோஸ் நிற தோலை தூளாக்கி ரோஸ் நிறத் தோலை தூக்கி எறியாமல் அதில் உப்பு மிளகாய்த்தூள் தடவி வெயிலில் காய வைத்தால் எண்ணெயில் பொறித்தால் வித்தியாசமான சிப்ஸ் ரெடி.

 மாவடு ஊறுகாய் போட தயாராகி விட்டீர்களா? அதில் சிறிது விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் அண்டாமல் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் .

சமையலுக்கு பெருங்காயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அந்த பெருங்காயம் நீரை மட்டும் உபயோகித்தால் மணம் சீராக இருக்கும் .

பெருங்காயமும் குறைவாக செலவாகும்.

 கீரை மசியல் செய்யும் போது சிறிது சோறு வடித்த கஞ்சியை விட்டு மசிக்க நன்கு குறைவாக மசிக்கலாம் .

ஒரு முழு உருளைக்கிழங்கை தோல் சீவி காற்று புகாத பாத்திரத்தில் ரொட்டியுடன் வைத்து மூடினால் ரொட்டி ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

 ஆனால் ஒரு கண்டிஷன் உருளைக்கிழங்கை 2 நாளைக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

 கோதுமை அல்வாவுக்கு பால் எடுத்த பிறகு மிஞ்சும் ரப்பர் போன்ற சக்கையை வேஸ்ட் பண்ண வேண்டாம்.
 அதை ஆவியில் வேகவைத்து உதிர்த்து கொஞ்சம் கடலை மாவு, அரிசி மாவு ,நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய், கருவேப்பிலை, உப்பு கலந்து பிசறி துக்கடாவாக எண்ணெயில் பொரித்து எடுத்தால் புதுவித பக்கோடா ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)