தேவையான பொருட்கள்
மட்டன் - அரை கிலோ
பட்டை - ஒரு துண்டு
மிளகு - அரை தேக்கரண்டி
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - ஏழு
தக்காளி - மூணு
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
தனியாத்தூள் - கால் டீஸ்பூன்
மட்டன் மசாலா - மூன்று தேக்கரண்டி
தயிர் ,புதினா ,கொத்தமல்லி ,உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும் .
பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் பட்டை, மிளகு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் மட்டன் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மட்டன் மசாலா தூள், தனியா தூள் , தயிர், உப்பு சேர்த்து நன்கு கொதி வந்தவுடன் பாத்திரத்தை மூடி கறி நன்றாக வேகும் வரை கொதிக்க வைக்கவும் .
பிறகு கறி வெந்தவுடன் புதினா கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் மட்டன் சாப்ஸ் ரெடி.