தேவையானவை
ஜவ்வரிசி, உளுந்து, புழுங்கல் அரிசி - 2 கப்
பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் பொடியதாக நறுக்கியது - தலா ஒன்னு
கடுகு, உளுந்து - தலா 1/4 டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
புழுங்கல் அரிசி, உளுந்தை களைந்து 2 மணி நேரம் ஊற வைத்து முதல் நாளே அரைத்து உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும் .
மறுநாள் ஜவ்வரிசியை சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டி நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
இந்த மாவை தோசைக்கல்லில் கனமான ஊத்தாப்பமாக ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும் .
பாசிப்பருப்பு பச்சடியுடன் பரிமாறவும்.