கத்தரிக்காய் சாதம்

kuttybabuPPT
0
கத்தரிக்காய் சாதம்


தேவையானவை 

வெங்காயம் - ஒன்று 

தக்காளி - ஒன்று 

கத்திரிக்காய் - 6

 எண்ணெய், உப்பு - தேவையான அளவு 

நெய் - 2 ஸ்பூன்

 வடித்து ஆற வைத்து சாதம் - ரெண்டு கப் 

வறுத்து அரைக்க

 காய்ந்த மிளகாய் - 10 

கடலைப்பருப்பு - அரை கப் 

முந்திரி - பத்து

 வெந்தயம் - அரை ஸ்பூன் 

சோம்பு - அரை ஸ்பூன் 

தாளிக்க 

கடுகு, சீரகம், சோம்பு, மஞ்சள் தூள், வெந்தயம், கருவேப்பிலை - சிறிதளவு

 செய்முறை

கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, முந்திரி, வெந்தயம், சோம்பு போன்றவற்றை பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் பொடி செய்து வைக்கவும்.

 அதே கடாயில் இரண்டு குழி கரண்டி எண்ணெய் ஊற்றி கரைந்ததும் கடுகு, சீரகம், மஞ்சள் தூள், கருவேப்பிலை, வெந்தயம், சோம்பு போன்றவற்றை சிறிதளவு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.

 பின்னர் சிறியதாக நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கி உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்.
 காய் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்த மசாலா தூள் சேர்த்து நன்றாக பிரட்டி வடித்து ஆற வைத்த சாதத்தை சேர்த்து நெய் விட்டு கிளறி இறக்கினால் சுவையான கத்திரிக்காய் சாதம் தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)