தேவையானவை
தயிர் - 200 மில்லி
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லி தூள் - ஒரு டீஸ்பூன்
பாசிப்பருப்பு - 400 கிராம்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சோடா உப்பு - கால் டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிது
கடுகு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு ஏற்ப
செய்முறை
பாசிப்பருப்பை ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை ஊற வைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் .
தயிரை கட்டி இல்லாமல் அடித்து அதில் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் மல்லித்தூள் சேர்த்து கலக்கி வைக்கவும்.
பாசிப்பருப்பில் உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் , சோடா உப்பு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து உருண்டைகளாக்கவும் பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் உருட்டிய உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அடுப்பில் மற்றொரு வாணிலையை வைத்து எண்ணெய் அல்லது தேவையான நெய் சேர்த்து கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இத்துடன் கலக்கி வைத்திருக்கும் தயிர் சேர்க்கவும் .
உப்பு போட்டு ஒரு கொதி வந்த பிறகு ஏற்கனவே பொறித்து வைத்திருக்கும் உருண்டைகளை சேர்த்து சில நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான பக்கோடி கி கடி தயார்.