நீரு தோசை

kuttybabuPPT
0
நீரு தோசை

தேவையான பொருட்கள் 

இட்லி அரிசி - இரண்டு கிண்ணம்

 அவல் - அரை கிண்ணம்

 தேங்காய் துருவல் - ஒரு கிண்ணம்

 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

 சர்க்கரை - அரை கரண்டி 

செய்முறை 

அரிசி, அவலை சுத்தமாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

 இத்துடன் தேங்காய் துருவல், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக அரைக்கவும்.

 இரண்டு கிண்ணம் தண்ணீர் சேர்த்து கரைக்கவும் .

மாவை புளிக்க வைக்க வேண்டாம்.

 சூடான வாணிலையில் ரவா தோசை ஊற்றுவது போல் தூக்கி ஊற்றவும்.
 ஒரு பக்கம் மட்டுமே சுட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)