புதினா ஜிஞ்சர் சிக்கன்

kuttybabuPPT
0
புதினா ஜிஞ்சர் சிக்கன்

தேவையான பொருட்கள் 

சிக்கன் - 1/2 கிலோ

 பெரிய வெங்காயம் - 4 

இஞ்சி - ஒரு இன்ச் அளவு

 பூண்டு - எட்டு

 பச்சை மிளகாய் - எட்டு 

புதினா - கைப்பிடி அளவு 

மல்லி மற்றும் கருவேப்பிலை - கைப்பிடி அளவு 

பட்டை - சிறு துண்டு 

கிராம்பு - 4 

ஏலக்காய் - 2 

தயிர் - இரண்டு தேக்கரண்டி

 உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - 30 மில்லி

 செய்முறை

முதலில் சிக்கனை நன்கு கழுவி வைக்கவும் .

பிறகு பெரிய வெங்காயத்தை நறுக்கவும் .

மிக்சியில் நறுக்கிய வெங்காயம், புதினா, மல்லி, கருவேப்பிலை, இஞ்சி பூண்டு, கிராம்பு, பட்டை, ஏலக்காய் அனைத்தையும் போட்டு நைசாக அரைக்கவும்.

 அடுப்பில் வாணிலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தில் பாதி போட்டு உப்பு போட்டு வதக்கவும்.

 வதங்கியதும் கழுவிய சிக்கனை நீரின்றி பிழிந்து வாணலியில் போடவும்.

 தீயை சிம்மில் வைக்கவும்.

 இதனை ஒரு பத்து நிமிடம் வதக்கவும்.

 பின் இதில் அரைத்த விழுதை போட்டு நன்கு வதக்கவும்.

 எண்ணெய் வேண்டாம் இதிலேயே தயிர் , எலுமிச்சை சாறு விடவும்.
 அடுத்த 10 நிமிடத்தில் உப்பு மற்றும் ருசி பார்த்து இறக்கினால் புதினா ஜிஞ்சர் சிக்கன் தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)