செஸ்வான் சாஸ் செய்ய
மிளகாய் வற்றல் - எட்டு
செஸ்வான் மிளகு - நான்கு (இல்லையென்றால் வீட்டில் உள்ள மிளகு பயன்படுத்தவும் )
ஆலிவ் ஆயில் - ஒரு ஸ்பூன்
இஞ்சி துருவல் - அரை ஸ்பூன்
பூண்டு நறுக்கியது - அரை ஸ்பூன்
வெங்காயம் நறுக்கியது - ஒன்று
சோயா சாஸ் - ஒரு ஸ்பூன்
வினிகர் - அரை ஸ்பூன்
சர்க்கரை - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 4 ஸ்பூன்
பிரைட் ரைஸ் செய்ய
வேகவைத்த பாஸ்மதி அரிசி - இரண்டு கப்
போன்லெஸ் சிக்கன் - 250 கிராம்
ஆலிவ் ஆயில் - ஒரு ஸ்பூன்
.இஞ்சி துருவல் - அரை டீஸ்பூன்
பூண்டு நறுக்கியது - ஒரு ஸ்பூன்
குடைமிளகாய், வெங்காயத்தாள், துருவிய கேரட் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மிளகாய் வற்றலை வெந்நீரில் 20 நிமிடம் ஊற வைத்து பின் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
நான் ஸ்டிக் பேனில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியவுடன் சர்க்கரை, உப்பு அரைத்த மிளகாய் வற்றல் விழுது, வினிகர் சோயா சாஸ் , சிஸ்வான் மிளகு சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு நான்கு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து வதக்கவும் .
நன்கு வதங்கியவுடன் தனியாக எடுத்து வைக்கவும் .
இப்போது செஸ்வான் சாஸ் தயார்.
பிறகு அதே பேனில் ஆலிவ் ஆயில் ஊற்றி சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
சிக்கன் வதங்கியவுடன், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் .
பிறகு குடைமிளகாய், வெங்காயத்தாள், கேரட் சேர்த்து வதக்கவும் .
அதனுடன் சிஸ்வான் சாஸ் சேர்த்து கிளறவும்.
பிறகு வேகவைத்த சாதத்தை சேர்த்து உப்பு சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும் .
இரண்டு முட்டைகளை உடைத்து ஸ்கிராம்பில்ட் எக் செய்து இதனுடன் பரிமாறவும்.