கிரீன் சிக்கன் கிரேவி

kuttybabuPPT
0
கிரீன் சிக்கன் கிரேவி 
தேவையான பொருட்கள் 

சிக்கன் - அரை கிலோ

 எண்ணெய் -  3 ஸ்பூன் 

பிரிஞ்சி இலை - இரண்டு 

பட்டை - இரண்டு 

ஏலக்காய் - 2 

கிராம்பு - ரெண்டு

 வெங்காயம் - ரெண்டு

 இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்

 பச்சை மிளகாய் -  இரண்டு 

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

 சீரகத்தூள் - அரை ஸ்பூன்

 கரம் மசாலா - அரை ஸ்பூன்

 மல்லித்தூள் - ரெண்டு ஸ்பூன்

 மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

 புதினா - ஒரு கைப்பிடி 

முந்திரி - ஏழு

 பச்சை மிளகாய் -  3 முதல் 4 

தயிர் - நான்கு ஸ்பூன் 

மிளகுத்தூள் - அரை ஸ்பூன்

 கஸ்தூரி மேத்தி - ஒரு ஸ்பூன்

 செய்முறை 

அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை , கிராம்பு சேர்த்து வதக்கவும் .

பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொண்னிறமாக வதக்கிடுங்கள்.

 தொடர்ந்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும்.

 அடுத்து அதில் சிக்கன் சேர்த்து நன்கு வதங்கிய பின் மஞ்சள் தூள்,  மிளகாய் தூள் , மல்லித்தூள்,  கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி போட்டு மூடி வேக வைக்கவும்.

 பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், தயிர், ஊற வைத்த முந்திரி பருப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

 அரைத்த கலவையை சிக்கனில் சேர்த்து கிளறி நன்கு வேக வைத்திடுங்கள்.

 சிக்கன் வெந்ததும் கடைசியாக அதில் மிளகுத்தூள், கஸ்தூரி மேத்தி சேர்த்து கிளறி இறக்கினால் வித்தியாசமான நிறத்துடன் சுவையான கிரீன் சிக்கன் கிரேவி ரெடி.
 இந்த கிரீன் சிக்கன் கிரேவி, சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை என அனைத்துக்கும் ருசிகரமான துணையாக இருக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)