தேவையானவை
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
திக்கான தேங்காய் பால் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி, பச்சை மிளகாய் - இரண்டு
பூண்டு - பற்கள் 4
மிளகாய் தூள் - இரண்டு டேபிள்ஸ்பூன்
வெறும் வாணிலையில் வறுத்து பொடித்த பட்டை, சோம்பு, பிரிஞ்சி இலை, கிராம்பு எல்லாம் கலந்து - ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்
பொடியாக அரிந்த மல்லித்தழை - இரண்டு டேபிள்ஸ்பூன்
செய்முறை
அரிசியை வெறும் வாணிலியில் வறுத்து வைக்கவும்.
குக்கரில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் , பூண்டு, தக்காளி அரிந்து போட்டு வதக்கி இஞ்சி விழுதும், மிளகாய் தூளும் சேர்க்கவும் .
வறுத்து பொடித்த மசாலா பொடியும், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் .
பிறகு அரிசியை கழுவி சேர்த்து தேங்காய் பாலையும் ஊற்றி மேலும் அரைக்கப் நீர் விட்டு எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.
குக்கரை மூடி போட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கவும் ஆவி வெளியேறியதும் மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.