பீட்ரூட் ரைஸ்

kuttybabuPPT
0
பீட்ரூட் ரைஸ்


தேவையானவை

 ஒரு கப் -  வேக வைத்த  சாதம் 

இரண்டு - பீட்ரூட் 

அரை ஸ்பூன் - கடுகு 

அரை ஸ்பூன் - உளுந்தம் பருப்பு 

அரை ஸ்பூன் - கடலைப்பருப்பு

 தேவையான அளவு - எண்ணெய்

மூன்று - வர மிளகாய் 

இரண்டு - வெங்காயம்

 செய்முறை

முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

 வதங்கிய பின் வர மிளகாய், வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

 வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு உப்பு சேர்த்து நறுக்கிய பீட்ரூட்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.

 தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.

 இறக்கும் பொழுது ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு இறக்கவும்.
 இதை எடுத்து வேகவைத்து சாதத்துடன் கலந்தால் பீட்ரூட் ரைஸ் ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)