கம்பு உப்புமா

kuttybabuPPT
0
கம்பு உப்புமா

தேவையானவை

 கம்பு - ஒரு கப் 

வெங்காயம் - ஒன்று

 பச்சை மிளகாய் - ரெண்டு

 இஞ்சி - சிறுத்துண்டு

 உளுந்து, கடலைப்பருப்பு, நெய், கடுகு, சீரகம், கருவேப்பிலை -  தாளிக்க 

உப்பு , கொத்தமல்லி - தேவைக்கு

 செய்முறை 

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பொடியாக நறுக்கவும்.

 கம்பை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மலர வேகவைத்து எடுக்கவும்.

 வாணலியில் நெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் கடுகு, சீரகம், கருவேப்பிலை தாளித்து உளுந்து, கடலைப்பருப்பு , வெங்காயம், பச்சை மிளகாய் , இஞ்சி சேர்த்து வதக்கவும்.

 வதங்கியவுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும் .

நீர் பாதியாக குறைந்ததும் வேக வைத்த கம்பு சேர்த்து கிளறவும்.
 மேலே கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான கம்பு உப்புமா தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)