வாழைப்பூ குருமா

kuttybabuPPT
0
வாழைப்பூ குருமா

தேவையானவை 

நறுக்கிய வாழைப்பூ, உருளைக்கிழங்கு, துவரம் பருப்பு - ஒரு கைப்பிடி அளவு

 எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்

 வெங்காயம் ,இஞ்சி பூண்டு விழுது, சோம்பு - சிறிதளவு 

மிளகாய் தூள், உப்பு - தேவையான அளவு 

செய்முறை

நறுக்கிய வாழைப்பூ, உருளைக்கிழங்கு, துவரம் பருப்பு ஆகிய மூன்றையும் தனித்தனியே வேகவைத்து எடுக்கவும்.

 வாணலியில் எண்ணெய்  ஊற்றி சோம்பு தாளித்து அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் .

மிளகாய் தூள், சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கியவுடன் துவரம் பருப்பை நீருடன் சேர்க்கவும்.

 உருளைக்கிழங்கை மசித்து அதில் கொட்டி, நீர் வடித்த வாழைப்பூவை சேர்த்து கிளறவும் .

இது சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும் .
உடலுக்கு சத்து தரும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)