பஜ்ஜி செய்யும் போது கடலை மாவு, அரிசி மாவுடன் ஒரு பங்கு மைதா மாவு சேர்த்தால் பச்சியின் சுவை அருமை.
அரிசி மாவுடன் கான்ப்ளக்ஸை பாெடித்து சேர்த்து அடை சுட்டால் உருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
தேங்காய் சாதம் , எலுமிச்சை சாதம் செய்யும் போது கொஞ்சம் பொட்டுக்கடலையை வறுத்து கொட்டினால் சுவையாக இருக்கும் .
பால் உரைக்கு ஊற்றும் போது வெதுவெதுப்பாக இருந்தால்தான் தயிர் நன்கு உறையும். சூடாகவோ அல்லது ஆறியதாகவோ இருந்தால் தயிர் சரியாக உறையாது .
நெய் போன்றவை கெட்டியாக இருக்கும்போது பாத்திரத்தில் இருந்து எடுப்பது சிரமமாக இருக்கும் ஸ்பூனை சூடாக்கி கொண்டு எடுத்தால் சுலபமாக இருக்கும் .
இளம் முள்ளங்கியை இடித்து பிழிந்த ரசம் ஒரு அவுன்ஸ் முதல் இரண்டு அவுட் வரையில் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் உள்ள அல்புமின் என்ற மாவுச்சத்து குறைந்துவிடும் .
உளுந்தம் பருப்பை, வடைக்கு அரைக்கும் போது பச்சரிசியையும் சேர்த்து கொஞ்சம் சேர்த்து அரைத்தால் வடை மொறு மொறு என்று இருக்கும்.
அதேபோல் வடக்கு அரைக்கும் போது தண்ணீர் அதிகமானால் சிறிது பச்சரிசி மாவில் சேர்த்தால் கெட்டியாகும்.
சுட்ட எண்ணெயில் கசடு அதிகமாக இருக்கும் .மூன்று நான்கு உருளைக்கிழங்கு துண்டுகளை அதில் பொரித்து எடுத்தால் எண்ணெய் சுத்தமாகிவிடும்.
மிளகாய் பொடி , தனியா சீரகம் போன்ற மசாலா சாமான்களை ஒரு முறை நன்கு வறுத்துவிட்டு பின்னர் பாட்டிலில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
தோசை கல்லை அடுப்பில் போட்டு காய்ந்ததும் அப்பளத்தை போட்டு ஒரு சுத்தமான துணியை சுருட்டி கொண்டு அப்பளத்தை ஒத்தி எடுங்கள் இரண்டு புறமும் இப்படியே செய்தால் கருகாமல் சுட்ட அப்பளம் கிடைக்கும்.
லவங்கப்பட்டை, சோம்பு இவற்றை லேசாக வறுத்து பொடி செய்து கொண்டு உருளைக்கிழங்கு, பட்டாணி போன்றவற்றுக்கு மசாலாவுடன் ஒரு ஸ்பூன் சேர்த்து விட்டால் மணக்கும்.
கருவேப்பிலை, கொத்தமல்லி இவற்றை அதிகம் வதக்காமல் பச்சையாக உணவில் சேர்த்துக் கொண்டால் சத்துக்கள் வீணாகாமல் இருக்கும் .
தோசை மாவு புளித்து விட்டால் ஒரு ஸ்பூன் சர்க்கரையை கலந்து விட்டால் புளிப்பு இருக்காது.
இட்லி, தோசை மாவு ஒரு லிட்டருக்கு ஒரு ஸ்பூன் வீதம் மிளகாய் தூள் கலந்து விட்டால் மாவில் புளிப்பே இருக்காது.
சாம்பாரை இறக்கும் முன்பு ஒரு ஸ்பூன் தனியா விதை , ஒரு வரமிளகாய் வறுத்து கரகரவென அரைத்து பொடியை கலக்கினால் மணம் வீசும்.
இட்டிலி அரைக்கும் உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்த பிறகு பிரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும். பிறகு எடுத்து அரைத்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.
மக்காச்சோளத்தை ரவை போல் அரைத்து அதில் ஒரு பங்குக்கு அரை பங்கு உளுந்து ஊற வைத்து அரைத்து மறுநாள் இட்லி சுட்டால் சுவையாக இருக்கும்.
கால் டம்ளர் பச்சரிசி, ஒரு சிவப்பு மிளகாய், சிறிது பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து கரகரப்பாக அரைத்து வைத்துக் கொண்டு சேனைக்கிழங்கு, சேப்பக்கிழங்கு ரோஸ்ட் செய்யும் போது இப்பொடியை சேர்த்து வதக்கினால் சூப்பராக இருக்கும்.
மேத்தி சப்பாத்தி செய்யும் போது நறுக்கிய வெந்தயக்கீரை, பாலக்கீரை ஒரு ஸ்பூன் எண்ணெயில் வதக்கி கால் கப் பாசிப்பருப்பு சேர்த்துக் கொண்டால் சூப்பராக இருக்கும்.
மரவள்ளி கிழங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கி ஊற வைத்து உளுந்தம் பருப்பு போட்டு சேர்த்து அரைத்து வடை செய்தால் சூப்பராக இருக்கும் .
மோர் களி கிளறும்போது அரிசி மாவு மூன்று கப் மைதா ஒரு கப் கலந்து கிளறினால் டெஸ்ட் ஆக இருக்கும்.