சிக்கன் பார்பிக்யூ

kuttybabuPPT
0
சிக்கன் பார்பிக்யூ

தேவையானவை

சிக்கன் பெரிய அளவில் கட் செய்தது - 600 கிராம் 

உப்பு - தேவையான அளவு 

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

 காஷ்மீரி மிளகாய் தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்

 மிளகுத்தூள் - ரெண்டு டேபிள் ஸ்பூன்

 மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

 எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்

 மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

 பார்பிக்யூ சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

 தனியா தூள் - ஒரு டீஸ்பூன்

 தயிர் - இரண்டு டேபிள் ஸ்பூன்

 கஸ்தூரி மேத்தி - ஒரு டீஸ்பூன்

 ஆலிவ் ஆயில் - ஒரு டேபிள் ஸ்பூன்

 வெண்ணெய் - ரெண்டு டேபிள் ஸ்பூன்

 செய்முறை

 சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து சுத்தமாக தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.

 ஒரு பெரிய பவுலில் சிக்கனிலிருந்து ஆயில் வரை உள்ள பொருட்களை போட்டு நன்கு கலந்து ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

 பிரிட்ஜில் வைக்கவும் .

இரும்பு தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து சூடானதும் சிக்கனை பரப்பி வைத்து இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

 தனலை சிம்பிள் வைத்து வேக வைக்கவும் .

நன்கு சிவக்க வேகவைத்து எடுக்கவும்.

 மயோநைஸ், சாலட், சப்பாத்தி போன்றவற்றுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

 இனி பார்பிக்யூ செய்வதற்கு உணவகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
 வீட்டிலேயே பார்பிக்யூ தயார் செய்து சாப்பிடலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)