தேவையான பொருட்கள்
விப்பிங் கிரீம் - ஒரு கப்
தேங்காய் பால் - அரைக்கப்
தேங்காய் பால் பவுடர் - இரண்டு டேபிள் ஸ்பூன்
ஐசிங் சர்க்கரை பவுடர் - இரண்டு டேபிள் ஸ்பூன்
பனைச் சர்க்கரை - தேவையான அளவு
தூதுவளை இலை சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்
கற்பூரவள்ளி இலை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை
தூதுவளையை ஒரு பிடி எடுத்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
ஒரு டேபிள் ஸ்பூன் அளவு சுண்டியதும் இறக்கவும்.
கற்பூரவள்ளி இலையையும் இதே போல் இரண்டு டேபிள் ஸ்பூன் வரும் வரை சுண்ட வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பவுலில் விப்பிங் கிரீம் சேர்த்து நன்கு பீக்ஸ் வரும் வரை ஃபீட் செய்யவும் .
அத்துடன் ஐசிங் சர்க்கரை பவுடர் சேர்த்து நன்கு பீட் செய்யவும் .
பின்னர் பால், பனைச் சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சவும் .
பால் பாதியாகும் வரை நன்கு கலந்து எடுக்கவும்.
பின்பு விப்பிங் கிரீம், சர்க்கரை, பால் சேர்த்து காய்ச்சிய கிரீம், தேங்காய், பால் பவுடர், மிளகுத்தூள், மஞ்சள் தூள், தூதுவளை இலை சாறு மற்றும் கற்பூரவள்ளி இலைச்சாறு எல்லாம் சேர்த்து இரண்டு நிமிடங்கள் ஃபீட் செய்து எடுக்கவும் .
தயாரான ஐஸ்கிரீமை எடுத்து ஒரு பவுலில் சேர்த்து கிளீன் பிலிம் பேப்பர் வைத்து மூடி பின்னர் பௌலில் மூடியை வைத்து நன்கு மூடி ப்ரீசரில் வைத்து ஆறு மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான கற்பூரவள்ளி மூலிகை ஐஸ்கிரீம் தயார் .
தயாரான ஐஸ்கிரீமை எடுத்து ஒரு ஐஸ்கிரீம் பௌலில் வைத்து விருப்பப்படி அலங்கரிக்கவும் .
அப்படியே சுவைக்க கொடுக்கலாம்.