தேவையானவை
மஸ்ரூம் - 200 கிராம்
மைதா மாவு - 2 மேசை கரண்டி
அரிசி மாவு - 2 மேசை கரண்டி
சோள மாவு - ஒரு மேசை கரண்டி
ஃபுட் கலர் - சிறிது
சில்லி சாஸ் - ஒரு மேசை கரண்டி
சோயா சாஸ் - ஒரு மேசை கரண்டி
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிது
பொரிப்பதற்கு எண்ணெய் - தேவைக்கேற்ப
தாளிப்பதற்கு தேவையானவை எண்ணெய் - மூன்று மேசை கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
செய்முறை
சுத்தப்படுத்திய காளான், வெங்காயம், பூண்டு மூன்றையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும் .
பின்னர் மைதா மாவு, அரிசி மாவு, சோள மாவு மூன்றையும் தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காளான் துண்டுகளை மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும் .
பின்னர் மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் பாேட்டு தாளிக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதனுடன் புட் கலர், சோயா சாஸ், சில்லி சாஸ், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும் பொறித்து வைத்துள்ள காளானில் உப்பு சேர்த்து இருப்பதால் தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும் .
கடைசியாக பொரித்து வைத்துள்ள கருவேப்பிலையை போட்டு அடுப்பை அணைக்கவும் .
சுவையான மஸ்ரூம் மஞ்சூரியன் தயார்.