மொறு மொறு சேமியா தோசை

kuttybabuPPT
0
மொறு மொறு சேமியா தோசை

தேவையான பொருட்கள் 

சேமியா - அரை கப் 

அரிசி மாவு - ஒரு கப்

 ரவை - கால் கப்

 சீரகம் - ஒரு டீஸ்பூன் 

வெங்காயம் பொடியதாக நறுக்கியது - அரை கப் 

கேரட் துருவியது - அரை கப் 

பச்சை மிளகாய் பாெடிதாக நறுக்கியது - இரண்டு

 இஞ்சி பொடிதாக நறுக்கியது - ஒரு டீஸ்பூன் 

கொத்தமல்லி தலை பாெடிதாக நறுக்கியது - 2 டீஸ்பூன்

 கருவேப்பிலை பொடிதாக நறுக்கியது - ஒரு டீஸ்பூன் 

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

 உப்பு - தேவைக்கு

 தண்ணீர் - நான்கு கப் 

செய்முறை 

அடி கனமான பாத்திரத்தில் சேமியாவை போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும் .

அகலமான பாத்திரத்தில் சேமியா, அரிசி மாவு, ரவை, சீரகம் ஆகியவற்றுடன் சரியான அளவு தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்கவும்.

 இந்தக் கலவையை 10 நிமிடங்களுக்கு அப்படியே மூடி வைக்கவும் .

பின்னர் அதனுடன் வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து கலக்கவும்.

 தேவைப்பட்டால் மேலும் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.

 இந்த மாவில் கடைசியாக கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தலையை சேர்க்கவும் .
அடுப்பில் தோசை கல்லை வைத்து அது சூடானதும் மாவை ஊற்றி மெல்லிய முருகலான தோசைகளாக சுட்டு எடுக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)