கல்யாண முருங்கை பூரி

kuttybabuPPT
0
கல்யாண முருங்கை பூரி
தேவையானவை 

கல்யாண முருங்கை இலை - 15 இலைகள் 

பச்சரிசி - 200 கிராம் 

மிளகு - ஒரு ஸ்பூன் 

சித்தரத்தை - 10 கிராம்

 உப்பு - சிறிதளவு

 சுக்கு பொடி - அரை ஸ்பூன் 

எண்ணெய் - தேவையான அளவு

 செய்முறை

பச்சரிசியை நன்றாக களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

 கல்யாண முருங்கை இலைகளை நன்றாக கழுவி அதன் நடுவில் உள்ள நரம்பை எடுக்கவும் .

அரிசியில் தண்ணீரை வடித்து மிக்ஸியில் போடவும்.

 அதனுடன் நறுக்கி வைத்துள்ள இலை, மிளகு, சித்தரத்தை, உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

 அரைத்த மாவில் சுக்கு பொடி கலந்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

 ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் மாவினை சிறு உருண்டையாக செய்து அதை ஒரு இலையில் சிறிது எண்ணெய் தடவி வடை போல தட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

 பூரி போன்று உப்பி வரும்போது திருப்பி போட்டு எடுக்கவும்.

 ஆரோக்கியம் நிறைந்த கல்யாண முருங்கை இலை உரிய ரெடி .

இதன் மேல் இட்லி பொடி தூவி கொடுத்தால் ருசி அல்லும் .
இதனை நாம் வாரத்திற்கு ஒருமுறையாவது டிபன் ஆக அல்லது ஸ்னாக்ஸ் ஆக செய்து கொடுத்து அசத்தலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)