அரேபியன் சிக்கன் கப்சா

kuttybabuPPT
0
அரேபியன் சிக்கன் கப்சா

தேவையான பொருட்கள்

கோழிக்கறி - அரை கிலோ 

அரிசி - 200 கிராம் 

தக்காளி - 2 

தக்காளி பேஸ்ட் - ஒரு ஸ்பூன் 

இஞ்சி பேஸ்ட்  -அரை ஸ்பூன்

 மிளகுத்தூள்  - அரை ஸ்பூன் 

பொடித்த ஏலக்காய் - அரை ஸ்பூன்

 வெங்காயம் - ரெண்டு 

பொடித்த லவங்கம் - அரை ஸ்பூன்

 எலுமிச்சை - ஒன்று

 எண்ணெய் - 50 மில்லி

 உப்பு - தேவைக்கு ஏற்ப 

செய்முறை 

நான்ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து மீடியம் அளவில் சூடு படுத்தவும் .

பாத்திரம் காய்ந்ததும் 75 மில்லி எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் இஞ்சி விழுதையும் கலந்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

 பொன் நிறம் ஆனதும் சுத்தப்படுத்தி வைத்துள்ள அரை கிலோ கோழிக்கறியை போட்டு வேக வைக்கவும் .

பிரவுன் நிறமாக சிக்கன் மாறியதும் ஒரு ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் பெப்பர் தூள், அரை ஸ்பூன் ஏலக்காய் பொடி, எலுமிச்சை ஒன்று, அரை ஸ்பூன் இலவங்கப் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

 மசாலா பொருட்கள் சேர்ந்ததும் ஒரு ஸ்பூன் தக்காளி பேஸ்ட், பொடியாக நறுக்கிய தக்காளி ஆகிய வெற்றி போட்டு மீண்டும் நன்றாக கலந்து விடவும்.

 எண்ணெய் மேலே கொதித்து வருவது தெரிந்தால் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்ந்து மீடியம் ஹை சூட்டில் 25 நிமிடம் சிக்கனை வேக வையுங்கள்.

 வெந்ததும் பாத்திரத்தில் இருந்து சிக்கனை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு அதில் ஊற வைத்து அரிசியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

 45 நிமிடம் அரிசி ஊறியிருக்க வேண்டும்.

 அதனை கிளறிவிட்டு தீயை மீடியம் ஹையில் வைத்து பாத்திரத்தின் மேல் ஒரு காட்டன் துண்டை வைத்து மூடி போட்டு அழுத்தி விடவும்.

 அது வேக 20 நிமிடம் ஆகும்.

 அந்த சமயத்தில் தனியாக எடுத்து வைத்த சிக்கன் துண்டை பேக்கிங் பேனில் வைத்து ஓவனில் மீடியம் ஹையில் ரோஸ்ட் செய்யுங்கள்.

 20 நிமிடத்தில் நீர் எல்லாம் ஆவியாகி அரிசி, மசாலா பொருட்களுடன் இணைந்து நன்றாக வெந்திருக்கும்.

 தற்போது சாதத்துடன் சிக்கன் துண்டை வைத்து பரிமாறலாம் .

இதற்கு டாப்பிங் தேவை என்பவர்கள் வேகவைத்த பாதாமை இரண்டு துண்டுகளாக்கி அதனை எண்ணெயில் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
 உலர் திராட்சையையும் வறுத்துகொண்டு அதனை டாப்பிங்காக தூவினால் கமகமக்கும் கப்சா ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)