அவல் சுண்டல்

kuttybabuPPT
0
அவல் சுண்டல்

தேவையானவை 

அவல் - நூறு கிராம்

 கொண்டைக்கடலை - 50 கிராம்

 புளி  - சிறு உருண்டை

 வெங்காயம் - ஒன்று

 மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

 பெருங்காயம் - ஒரு சிட்டிகை 

கடுகு, உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

 கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 காய்ந்த மிளகாய் - மூணு 

தனியா - ஒரு டீஸ்பூன் 

தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்

 செய்முறை 

கொண்டை கடலையை ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.

 புளியை கரைத்து அதில் அவல் ஊற வைத்தது கொண்டைக்கடலை, மஞ்சள் தூள் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.

 வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய்  இரண்டு, தனியா கடலைப்பருப்பு சேர்த்து வறுத்து பொடிக்க வேண்டும்.
 வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி ஊற வைத்து அவல், கொண்டைக்கடலை, தேங்காய் துருவல் வறுத்த பொடி சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)