தேவையான பொருட்கள்
சிக்கன் சால்னா - ரெண்டு கப்
பரோட்டா - ரெண்டு
வாழை இலை - ஒன்று
நறுக்கிய வெங்காயம் - ஒன்று
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை
முதலில் வாழை இலையை அடுப்பில் காட்டி இரு பக்கமும் லேசாக சூடு படுத்தி எடுத்துக் கொள்ளவும் .
பின்பு இலையைப் பிரித்து வைத்து அதன் மேல் ஒரு புரோட்டாவை வைத்து ஒரு கப் சால்னாவை உற்றவும்.
இப்போது அதில் நறுக்கிய வெங்காயத்தை தூவவும்.
தொடர்ந்து அதன் மேல் மீண்டும் ஒரு புரோட்டாவை வைத்து ஒரு கப்பு சால்னாவை ஊற்றவும் இறுதியாக அதன் மேல் சில கொத்தமல்லி, வெங்காயம் ஆகியவையை தூவி வாழை இலையை பக்குவமாய் மடித்து நூல் அல்லது வாழை நாரை வைத்து கட்டி எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் தடவி அதன்மேல் கட்டி வைத்துள்ள வாழை இலை பரோட்டாவை வைக்கவும்.
இப்போது கடாயில் சிறிதளவு தண்ணீர் தெளித்து கடாயை மூடி ஐந்து நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
இப்போது வாழை இலையை திருப்பி போட்டு மீண்டும் சிறிதளவு தண்ணீர் தெளித்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் வேகவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
பின்பு வாழை இலையை குறித்து ஒரு தட்டில் பரிமாறினால் சுவையான கிழி பரோட்டாவை ஒரு கை பார்த்து விடலாம்.