தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் - ஆறு
அரிசி - இரண்டு டீஸ்பூன்
துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
துருவிய தேங்காய் - அரை கப்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - ஆறு
புளிக்காத கெட்டி தயிர் - ஒன்றரை கப்
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
தாளிக்க
தேங்காய் எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
கடுகு - இரண்டு டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
வெந்தயம் - சிறிதளவு
வர மிளகாய் - 4
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
கருவேப்பிலை - தேவைக்கு
செய்முறை
துவரம் பருப்பு மற்றும் அரிசியை 25 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
இதோடு துருவிய தேங்காய், இஞ்சி, சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் உப்பு, மஞ்சள் பொடி, தயிர் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.
இந்த விழுதுடன் நெல்லிக்காயை வேக வைத்து விதைகளை நீக்கி கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் .
தற்போது அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை ஒரு கடாயில் மாற்றி மிக்ஸி கழுவிய நீரையும் ஊற்றி சூடாக்கவும் .
லேசாக கொதி வரத் தொடங்கியவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
அடுத்ததாக சிறிய கடாய் உள்ளதில் தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் .
இதில் கடுகு, சீரகம், வெந்தயம், கருவேப்பிலை, காய்ந்து மிளகாய் மற்றும் பெருங்காயத்தை சேர்த்து தவிர்க்கவும்.
தாளிப்பை மோர்க்குழம்பில் சேர்த்து ஒரு முறை கிளறி விடவும் .
இதனை சற்று கூடுதல் சுவைக்காக தாளிக்கும் போது சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கி குழம்பில் சேர்க்கலாம்.