தேவையானவை
கடலைப்பருப்பு, துவரம் பருப்பு - தலா ஒரு கப்
பயத்தம் பருப்பு - முக்கால் கிலோ
மல்டி மில்லட் மாவு - ஒரு கப்
பூண்டு - ஐந்து பல்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - மூன்று
கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் ரெண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஊறிய பருப்புடன் பூண்டு, கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து அரைத்து தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த மாவுடன் மல்டி மில்லட் மாவை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து அடை மாவு பதத்திற்கு கலந்து கொண்டு அடையாக ஊற்றி, சிவந்ததும் எடுக்க வேண்டும்.