தேவையானவை
பச்சரிசி - ஒரு கப்
பாசிப்பருப்பு - அரை கப்
கடலை பருப்பு - அரை கப்
துவரம் பருப்பு - அரை கப்
சின்ன வெங்காயம் - எட்டு
பட்டை - ஒன்னு
கிராம் - நாலு
தக்காளி - ஒன்று
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 10 பல்
வெங்காயம் மீடியம் அளவு - 1
கேரட் சின்னதாய் நறுக்கியது - ஒன்று
மல்லி கீரை - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 3
கெட்டி தேங்காய் பால் - ஒரு கப்
செய்முறை
முதலில் அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒரு கடாயில் பாசிப்பருப்பை நன்கு வறுக்க வேண்டும்.
பிறகு பிரஷர் குக்கரில் பச்சரிசி, வறுத்த பாசிப்பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி, நறுக்கிய இஞ்சி, பத்து பூண்டு பல், வெங்காயம், பச்சை மிளகாய் , மல்லி கீரை ஆகிய அனைத்தையும் சேர்த்து எட்டு கப் தண்ணீர் விட்டு நான்கு முதல் ஐந்து விசில் வரை வேக வைக்க வேண்டும்.
பின்னர் அடுப்பை சிம்மில் போட்டு இன்னொரு ஐந்து விசில் வரும் வரை காத்திருக்கவும்.
தேவைக்கேற்ப கஞ்சி பதமாக வரும் வரை சிம்மில் கொதிக்க விடுங்கள்.
தேங்காய் பாலுடன் சேர்த்து கிளறிவிட்டு ஐந்து நிமிடம் கொதிவந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.
பின்னர் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு போட்டு மல்லி கீரை தேவைக்கேற்ப சேர்த்து தாளிக்க வேண்டும்.
இந்த தாளிப்பை தயார் நிலையிலும் கஞ்சியில் சேர்த்து ஒரு முறை கிளறினால் கம கமன்னு என ருசியான நோம்பு கஞ்சி ரெடி .
அசைவச் சத்துக்கள் சுவை தென்பட்டால் இத்துடன் மட்டன் எலும்பு கறி அல்லது கைமாவையும் சேர்த்து வதக்கி கொதிக்க வைத்து கொள்ளலாம்.
கூடுதல் ருசியாக இருக்கும்.