தேவையான பொருட்கள்
வேகவைத்த சோயா உருண்டைகள் - ஒரு கப்
பச்சை பட்டாணி - 100 கிராம்
வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு - ரெண்டு
பெரிய வெங்காயம் நறுக்கியது - 2
ஏலக்காய் - 2
நட்சத்திர சோம்பு - ஒன்னு
வரமிளகாய் - ஒன்று
வெள்ளைப் பூண்டு - ஐந்து
மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி
சீரகப்பொடி - அரை தேக்கரண்டி
மல்லிகை பொடி - ஒன்னரை தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மல்லி இலை - சிறிதளவு
தேவையான அளவு - உப்பு
செய்முறை
கடாயை சூடாக்கி ஏலக்காய் மற்றும் நட்சத்திர சோம்பை மிதமான சூட்டில் வறுக்கவும்.
வெங்காயம் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும் .
பின்னர் வெள்ளைப் பூண்டு, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும் .
இவற்றுடன் மிளகாய் பொடி, மல்லி பொடி , சீரக பொடி, கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
பச்சை பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
பின்னர் சோயா உருண்டைகள் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் கிளறி தண்ணீரில் சிறிது வற்றும் வரை வேக வைக்கவும்.
கொத்து மல்லி இலை தூவி இறக்கினால் சப்பாத்திக்கு டேஸ்டியான சோயா கீமா சுவைத்து மகிழலாம்.