பேரீச்சை கேரட் பாயாசம்

kuttybabuPPT
0
பேரீச்சை கேரட் பாயாசம்
தேவையான பொருட்கள் 

கேரட் துருவல் - ஒரு கப்

 பேரிச்சம்பழம் - ஒரு கப் 

தேங்காய் பால் - ரெண்டு கப்

 தண்ணீர் - ஒரு கப் 

உலர்ந்த திராட்சை - அரைக்கப் 

பாதாம் பருப்பு - 10

 ஏலக்காய் தூள் - சிறிதளவு 

செய்முறை

முதலில் பேரிச்சம் பழங்களை தண்ணீர் சேர்த்து அரைத்து பேரிச்சம்பழம் பேஸ்ட் தயார் செய்யவும்.

 பின்னர் கேரட் துருவலையும் தண்ணீர் சேர்த்து அரைத்து கேரட் விழுது தயார் செய்யவும்.

 பாதாம் பருப்பை எண்ணெய் இல்லாமல் வறுத்து வைத்துக் கொள்ளவும் .

ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள கேரட் மற்றும் பேரிச்சம்பழம் விழுதுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வேக விடவும்.

 இத்துடன் தேங்காய் பால் மற்றும் ஏலக்காய் தூள் சிறிதளவு சேர்த்து நன்றாக கிளறவும்.

 மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.
 உலர்ந்த திராட்சை, பாதாம் பருப்பு சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)