தாய்லாந்து ஸ்பெஷல் மாங்காய் சாலட்

kuttybabuPPT
0
தாய்லாந்து ஸ்பெஷல் மாங்காய் சாலட்

தேவையான பொருட்கள் 

பூண்டு - இரண்டு பல் 

காய்ந்த மிளகாய் - இரண்டு 

எலுமிச்சம் பழச்சாறு - ஒரு டேபிள் ஸ்பூன் 

நாட்டு சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்

 ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

 வெள்ளை எள் - 2 டேபிள் ஸ்பூன் 

பெரிய வெங்காயம் - அரை 

சிவப்பு குடைமிளகாய் - ஒன்று

 மாங்காய்  - ஒன்னு 

புதினா இலை - ஒரு கைப்பிடி

 கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி

 முந்திரி அல்லது வேர்கடலை  பொடித்தது  - இரண்டு டேபிள் ஸ்பூன்

 உப்பு - தேவைக்கு 

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு, காய்ந்த மிளகாய், எலுமிச்சம் பழச்சாறு, நாட்டு சர்க்கரை, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை போட்டு விழுதாக அரைக்கவும்.

 அடுப்பில் வாணிலியை வைத்து சூடானதும் அதில் எள்ளைக் கொட்டி வறுத்துக்கொள்ளவும்.

 மாங்காயை மெல்லிய வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.

 சிவப்பு குடைமிளகாய் மற்றும் பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும் .

ஒரு அகன்ற பாத்திரத்தில் மாங்காய், வெங்காயம், சிவப்பு குடைமிளகாய், புதினா, கொத்தமல்லி தழை, எள், உப்பு அரைத்து வைத்திருக்கும் விழுது ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு லேசாக கலக்கவும்.

 அதன் மேல் பாெடித்த முந்திரி அல்லது வேர்கடலையை தூவவும்.
 இப்போது தாய்லாந்து ஸ்பெஷல் மாங்காய் சாலட் தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)