கொள்ளு வெஜிடபிள் கட்லட்

kuttybabuPPT
0
கொள்ளு வெஜிடபிள் கட்லட்

தேவையானவை 

வறுத்த கொள்ளு - 200 கிராம் (அதை ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்)

 கோஸ், கேரட், பீன்ஸ், முள்ளங்கி தலை - 75 கிராம் துருவியது 

உருளைக்கிழங்கு - 150 கிராம் வேக வைத்தது 

இஞ்சி - சிறு துண்டு

 பச்சை மிளகாய் - ஆறு 

மசாலாத்தூள்  - ஒரு ஸ்பூன் 

உப்பு - சுவைக்கு  

எண்ணெய் - 200 கிராம் 

அரிசி மாவு - 50 கிராம் 

செய்முறை 

கொள்ளை இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும் .

வாழை இலையில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கி பின்பு துருவிய காய்கறி கலவையை சேர்த்து வதக்கி தோல் உரித்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து அவனுடன் மசாலாத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

 அதனை அரைத்து கொள்ளுடன் கலந்து சிறுசிறு கட்டுகளாக தட்டி தவாவில் எண்ணெய் விட்டு சூடாக்கி எடுக்கவும் .
எண்ணெயில் பொரிப்பதாக இருந்தால் அரிசி மாவில் பிரட்டி பின்பு பொறித்தால் உடையாமல் மொறுமொறுப்பாக வரும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)