தேவையானவை
கோதுமை மாவு - 200 கிராம்
மோர் - 50 மில்லி
பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் - எட்டு
வெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
சமையல் சோடா - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - ஒரு பிடி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
கோதுமை மாவையும், சமையல் சோடாவையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
நீரில் உப்பு சேர்த்து கரைத்து அதை கோதுமை மாவில் ஊற்றி கரைக்க வேண்டும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலையாக இவற்றை பொடியாக நறுக்கி மாவில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு கெட்டியான பதத்தில் இருக்குமாறு ரசிக்க வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை கொஞ்சம் கொஞ்சமாக உதிர்த்து போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
எண்ணெய் இருந்தால் வடித்துக் கொள்ள வேண்டும்.