வாடி வதங்கி போன காய்களின் மீது எலுமிச்சை சாறு பிழிந்த தண்ணீர் தெளித்து விட்டால் காய்கள் புதிது போல் பிரஸ் ஆகிவிடும்.
சிறிதளவு கடலை மாவுடன் தண்ணீர் சேர்த்து சமையல் மேடையை சுத்தம் செய்தால் எண்ணெய் பிசுக்கு போய்விடும் .
வறுத்து பொடி செய்த வெந்தய பொடியை அரை தேக்கரண்டி ரசம் கொதிக்கும் போது தூவி இறக்கினால் ரசம் சுவையாக இருக்கும் .
இட்லி ஊற்றும் போது மாவை அடிவரை கலக்காமல் மேலாக கலந்து எடுத்து ஊற்றினால் இட்லி மிருதுவாக இருக்கும்.
பஜ்ஜி மாவில் சிறிதளவு நெய்யை சூடு செய்து கலந்து பிறகு மாவை கரைத்து பஜ்ஜி சுட்டால் வச்சி வாசனையாக இருக்கும்.
இடியாப்ப மாவில் சில துளிகள் நெய் சேர்த்தால் இடியாப்பம் மென்மையாக இருக்கும் .
சமைப்பதற்கு எடுத்து வைத்த தேங்காய் காய்ந்து விட்டிருந்தால் பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு துருவினால் நன்கு தூவ வரும்.
ஒரு கிலோ கோதுமையுடன் 100 கிராம் பொட்டுக்கடலை, 100 கிராம் நிலக்கடலை, 100 கிராம் சோயா பீன்ஸ் சேர்த்து அரைத்தால் சப்பாத்தி புதுசுவையில் இருப்பதோடு சத்தாகவும் இருக்கும்.
சமையலுக்கு காய்கறிகளை பெரிய துண்டுகளாக நறுக்கி கொண்டால் காய்கறியில் உள்ள சத்துக்கள் வீணாகுவது தவிர்க்கப்படும்.
காய்கறிகளை மீதமான தீயில் குறைந்த நேரமே வேக வைக்க வேண்டும்.அப்போதுதான் அதில் உள்ள சத்துக்கள் அழியாது.
சில காய்கறிகளை தோலுடன் சமைப்பதே நல்லது. ஏனெனில் தோளில் பெருமளவு வைட்டமின்களும், உலோக சத்துக்களும் அடங்கியிருக்கின்றன.
சீரகம், மிளகு இரண்டையும் நெய்யில் வதக்கவும் .
அதனுடன் நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கவும் .
அதனுடன் சிறிது உப்பும் சூடான சாதமும் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான சுலபமான ஜீரா சாதம் ரெடி.
கீரையை சுவைப்பதற்கு முன்பு மஞ்சள் கலந்த நீரில் சிறிது நேரம் வைத்திருந்து எடுத்து பின்னர் சமைத்தால் நிறமும் மாறாது. ரசாயன தெளிப்பிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
டிகாஷன் வலையில் உள்ள சிறு ஓட்டைகளில் டிகாஷன் இறங்கும் இடத்தில் சில சமயம் அடைப்புகள் ஏற்பட்டு விடும். அதை சரி செய்ய அடுப்பு பற்ற வைத்துடன் கழுவிய காபி ஃபில்டரை அதன் மீது சில நிமிடங்கள் வைத்து எடுத்து மீண்டும் கழுவி விட்டால் அடைப்புகள் நீங்கிவிடும். டிக்காசனும் வேகமாக இருக்கும்.
மிதமான பிரட்டின் ஓரங்களை நறுக்கி எடுத்துவிட்டு குளித்த மோரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் 1/4 கிலோ புழுங்கல் அரிசியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும் .அரிசி ஊறியதும் அதனுடன் மோரில் ஊற வைத்து பிரட்டை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து தோசைகளாக வார்த்தைய எடுத்தால் சுவையாக இருக்கும்.
மசாலா பொடிக்கு மிளகாய் வறுக்கும்போது அதோடு ஒரு கைப்பிடி நிலக்கடலை சேர்த்துக் கொள்ள நல்ல சுவையுடன் இருக்கும்.
கறி வகைகள் செய்யும் போது இந்த கலவையை லேசாக தூவினால் கறி வகைகள் மிகவும் சுவையாக இருக்கும்.
மீந்து போன ஆமை வடையை மறுநாள் 4, 5 துண்டுகளாகி எண்ணையில் நன்கு பொரித்து எடுத்து கீரை கூற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.