தேவையானவை
மலபார் வெள்ளரிக்காய் - அரை கிலோ
வேகவைத்த துவரம் பருப்பு - அரை கப்
புளித்தண்ணீர் - தேவையான அளவு
சாம்பார் பொடி - ஒன்னரை டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - இரண்டு
மஞ்சள் தூள் - சிறிதளவு
பெருங்காயத்தூள், கடுகு, கருவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
மலபார் வெள்ளரியை தோள் விதை நீக்கி துண்டுகளாக அறுத்துக் கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு , பெருங்காயத்தூள், கருவேப்பிலை, பச்சை மிளகாயை தாளிக்கவும்.
இதில் நறுக்கிய மலபார் வெள்ளரிக்காய் துண்டுகள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் புளி தண்ணீர், சாம்பார் பொடி சேர்த்து கொதி வந்தவுடன் வேக வைத்த துவரம் பருப்பு சேர்த்து சாம்பார் பதம் வந்தவுடன் இறக்கவும்.