தேவையானவை
நெத்திலி கருவாடு - 100 கிராம்
சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை - 100 கிராம்
எண்ணெய் - 100 மில்லி
காய்ந்த மிளகாய் - 20
உப்பு - தேவைக்கேற்ப
சின்ன வெங்காயம் - 6
பூண்டு - 4 பல்
தக்காளி - ஒன்று
செய்முறை
அடுப்பில் கடாய் சூடான பிறகு அதில் எண்ணெய் உற்றவும் .
எண்ணெய் சூடான பிறகு நெத்திலி கருவாட்டை பொறித்து பேப்பர் டவர்களில் வைத்துக் கொள்ளவும்.
அதே எண்ணெயில் வேர்க்கடலையும் வறுத்தெடுக்கவும் .
காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
வாணலியில் மீதமுள்ள எண்ணெயில் அரைத்த விழுதை போட்டு நன்றாக வதக்கவும்.
பச்சை வாசனை போன பிறகு பொரித்த கருவாடு, கடலை, தேவையான அளவு உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக நீர் வற்றும் வரை கிளறி இறக்கவும்.
சுவையான நெத்திலி சம்பல் ரெடி.