தேவையானவை
சேமியா - ஒரு கப்
தண்ணீர் - மூன்று கப்
பாசிப்பருப்பு - கால் கப்
நெய் - 2 மேசை கரண்டி
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
முந்திரி - பத்து
உப்பு தேவையான அளவு
தாளிக்க
காய்ந்த மிளகாய் - இரண்டு
மல்லி விதை - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகு - ஒரு ஸ்பூன்
பட்டை - 2
வெங்காயம் - 4
ஏலக்காய் - 2
செய்முறை
சேமியாவுடன் பாசிப்பருப்பை வறுத்து தண்ணீர் மற்றும் மஞ்சத்தூள் சேர்த்து குக்கரில் நான்கு விசில் அடுப்பில் வைத்து வேக வைத்து இறக்கவும்.
காய்ந்த மிளகாய், மல்லி விதையை லேசாக வறுத்து பிடித்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து நெய்யை ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு, பட்டை, ஏலக்காய், லவங்கம், முந்திரி சேர்த்து இறக்கவும்.
வேகவைத்த சேமியாவில் உப்பு மற்றும் பொடித்த பொடி, தாளித்த பொருட்களை சேமியாவில் கொட்டி கிளறவும்.
சூடான மசாலா சேமியா பொங்கலை சட்னியுடன் பரிமாறலாம்.