தேவையானவை
ப்ரோக்கோலி - ஒன்று அதை சிறியது மற்றும் துண்டுகளாக்கப்பட்டு வைக்கவும் .
உப்பு - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
ஃப்ரை செய்வதற்கு
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
பூண்டு பற்கள் பொடியாக நறுக்கியது - ஐந்து
கருவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் நீளமாக கீரியது - ரெண்டு
வெங்காயம் பொடியாக நறுக்கியது -
ஒன்று
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதித்து விட்டு பின் அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அத்துடன் ப்ரோக்கோலி சேர்த்து நான்கு முதல் ஐந்து நிமிடம் வேக வைத்து இறக்கி நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணிலையை அனுப்பி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்துவதற்கு பின் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து புரட்டி வேக வைத்துள்ள புரோக்கோலியை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை பிரட்டி, பின் மிளகுத்தூளை சேர்த்து கிளறி இறக்கினால் ப்ராக்காேலி பெப்பர் ப்ரை ரெடி.