தேவையானவை
பீன்ஸ் - அரை கிலோ
கடலைப்பருப்பு - 150 கிராம்
காய்ந்த மிளகாய் - இரண்டு
எண்ணெய் - மூன்று டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
தனி மிளகாய் தூள் - அரை டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கடலைப்பருப்பை அலசி அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊற விடவும்.
பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், தனியா, மிளகாய் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து கொதி வந்ததும் பீன்ஸ் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய் சிறிதளவு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை சேர்த்து சிறிது நேரம் கிளறி கொள்ளவும்.
இதனை சேர்த்து சிறிது நேரம் மூடி போட்டு வேக விட்ட பிறகு சிறிது நேரம் ஆறவிட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை வேகவைத்த பீன்ஸ் மற்றும் அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பையும் சேர்த்து சிறிது நேரம் கிளறி விடவும்.
இவை சிறிது உதிரி உதிரியாக வந்த பிறகு அடுப்பை அணைத்து எடுத்தால் சுவையான பீன்ஸ் உசிலி தயார்.