தேவையானவை
சர்க்கரை - 200 கிராம்
மைதா மாவு - 500 கிராம்
தேன் - 250 கிராம்
வெண்ணெய் - 200 கிராம்
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
ஆரஞ்சு எசென்ஸ் - சில துளிகள்
முட்டை - இரண்டு
செய்முறை
பொடித்த சர்க்கரையும், வெண்ணையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
முட்டைகளை உடைத்து நன்றாக அடித்து அதை குழைத்த கலவையில் சேர்க்க வேண்டும்.
அதில் தேனையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
சலித்த மாவை குழைத்து கலவையில் போட்டு கலக்க வேண்டும்.
10 அங்குல நீளமும் இரண்டரை அங்குல அகலமும் உள்ள பாத்திரத்தில் பேக் செய்ய வேண்டும்.
தட்டில் நெய் தடவி மாவு தூவி கொள்ள வேண்டும் .
அந்தத் தட்டில் கலவையை போட வேண்டும்.
இந்த தட்டின் அடியில் சூட்டில் வைத்து 45 நிமிடங்கள் கழித்து எடுக்கவும்.
இதாே தேன் கேக் ரெடி!