தாய்ப்பால் சுரக்க வெள்ளை சுடும்பு மீன் குழம்பு

kuttybabuPPT
0
தாய்ப்பால் சுரக்க வெள்ளை சுடும்பு மீன் குழம்பு 
தேவையான பொருட்கள் 

வெள்ளை சுடும்பு மீன் - அரை கிலோ

 சின்ன வெங்காயம் - 150 கிராம் 

பூண்டு - 10 பல்

 தக்காளி - மூன்று 

தேங்காய் - ஒரு மூடி 

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

 தனியாத்தூள் - 3 டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 புளி - நெல்லிக்காய் அளவு

 நல்லெண்ணெய்   - ஒரு குழி கரண்டி

 உப்பு - தேவையான அளவு

 கருவேப்பிலை - ஒரு கொத்து

 கொத்தமல்லி - சிறிது

 கடுகு - அரை டீஸ்பூன்

 சீரகம் - ஒரு டீஸ்பூன் 

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

 செய்முறை 

மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

 அடுப்பில் வாணிலையை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்ததும் கருவேப்பிலை போடவும்.

 பிறகு சிறிதாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

 பூண்டு சிறியதாக நறுக்கி போடவும்.

 தக்காளி சேர்த்து வதக்கவும் .

தக்காளி சுருண்டு வரும்போது தனியா தூள் போட்டு கிளறவும்.

 புளிக்கரைசலை ஊற்றி மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

 பச்சை வாசனை போனதும் தேங்காய் பால் சேர்க்கவும் .

குழம்பு பதத்திற்கு வந்ததும் அனலை குறைத்து மீனை போடவும்.

 5 நிமிடங்கள் கழித்து மீன் உடையாமல் திருப்பிப் போடவும்.
 வெந்ததும் அடுப்பை அணைத்து கொத்தமல்லியை தூவவும் வெள்ளை சுடும்பு மீன் குழம்பு தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)