தேவையான பொருட்கள்
கோதுமை பிரட் - 4 ஸ்லைஸ்
முட்டை - மூணு
வெங்காயம் - 3
கொத்தமல்லி - அரை கப்
பச்சை மிளகாய் - இரண்டு
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
பட்டர் - ரெண்டு டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பவ்லில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.
அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக அடித்துக் கொள்ளவும்.
தவா சூடானதும் வெண்ணை போட்டு உருகியதும், பிரட் ஸ்லைசை அதன் மீது வைத்து இரு பக்கமும் சூடு செய்து எடுக்கவும்.
பின்னர் அதே தவாவில் மீண்டும் வெண்ணை போட்டு உருகியதும் தயாராக உள்ள முட்டை கலவையை அதன் மீது ஊற்றி பரப்பி வேக விடவும்.
முட்டை வெந்ததும் அதன் மீது பிரட் ஸ்லைஸ் வைத்து நான்கு புறமும் மடித்து எடுக்கவும்