சைனீஸ் சில்லி சிக்கன்

kuttybabuPPT
0
சைனீஸ் சில்லி சிக்கன்



தேவையான பொருட்கள்

சிக்கனை ஊற வைக்க எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ

 மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன் 

கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்

 மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் 

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்

 முட்டை - ஒன்னு 

உப்பு - சிறிதளவு 

அரை - எலுமிச்சை சாறு 

இரண்டாவது முறை ஊற வைக்க

மைதா - மூன்று டேபிள் ஸ்பூன் 

சோள மாவு - ஒன்றரை டேபிள் ஸ்பூன்

 சாஸ் தயார் செய்ய 

வெங்காயம் நறுக்கியது - 20 

பூண்டு பல் நறுக்கியது - 20

 குடைமிளகாய்  நறுக்கியது - ஒன்று

 சில்லி சாஸ் - ரெண்டு டீஸ்பூன் 

தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன் 

சோயா சாஸ் - அரை டீஸ்பூன் 

வினிகர் - அரை டீஸ்பூன் 

சோளமாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

 தண்ணீர் - அரை கப் 

உப்பு - தேவையான அளவு 

சர்க்கரை - சிறிதளவு 

வெங்காயத்தாள் - சிறிதளவு

 செய்முறை 

சிக்கனை நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

 பிறகு ஊற வைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

 30 நிமிடம் கழித்து மைதா மாவு சோள மாவு சேர்த்து நன்றாக பிசைந்து பார்த்து பத்து நிமிடம் வைக்கவும்.

 கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் சிக்கனை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும் .

இதே போல் அனைத்தையும் பொரித்து எடுத்து தனியாக வைக்கவும் .

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு அதனுடன் குடைமிளகாய் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

 பிறகு சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், வினிகர் சேர்த்து குறைந்த தீயில் வார்க்கவும்.

 இதனுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.

 சாேளமாவில் தண்ணீர் சிறிது ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ளவும்.

 பிறகு இந்த கலவையில் சோள மாவு கரைசலை ஊற்றி குறைந்த தீயில் இரண்டு நிமிடம் வைக்கவும்.

 பிறகு  சிக்கனை இதனுடன் சேர்த்து அனைத்தையும் நன்றாக சேரும் வரை கலக்கவும் .
வெங்காயத்தாள் அல்லது நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)