தேவையானவை
பச்சரிசி - 200 கிராம்
உளுந்து - 6 டீஸ்பூன்
வெந்தயம் - ஒன்றரை டீஸ்பூன்
வெல்லம் - 200 கிராம்
ஏலக்காய் - 2
நெய் - 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 10 டீஸ்பூன்
சோடா உப்பு - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
பச்சரிசி ,உளுந்து, வெந்தயம் மூன்றையும் மூன்றாக சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.
அடுப்பில் கனமான அடிபகுதி உள்ள பாத்திரத்தை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
இத்துடன் பாெடித்த வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு கரைத்து வடிகட்டவும்.
ஊறிய அரிசி, உளுந்து, வெந்தயத்துடன் வெல்லம் கரைத்த தண்ணீர் ஊற்றி மையமாக கிரைண்டரில் அரைக்கவும்.
மாவை வழித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து எட்டு மணி நேரம் புளிக்க விடவும் .
அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி தேங்காய் துருவல் லேசாக சேர்த்து வதக்கவும்.
இதை பாெடித்து வைத்துள்ள மாவில் சேர்த்து கலக்கவும்.
இத்துடன் பிடித்த ஏலக்காய், சோடா உப்பு, இரண்டையும் சேர்த்து பணியாரம் ஊற்றும் பதத்துக்கு கரைத்து பணியார குழியில் ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.