தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 3
லவங்கம் - 7
பிரியாணி இலை - இரண்டு
முழு பூண்டு - ஒன்னு
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு டேபிள் ஸ்பூன்
மைதா - ஒரு குழி கரண்டி
வெண்ணெய் - ரெண்டு டேபிள் ஸ்பூன்
பால் - 250 மில்லி
பிரஸ் கிரீம் - 2 டேபிள் ஸ்பூன்
இடிச்ச மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன்
சீசனிங் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் ஆயில் - நான்கு டேபிள் ஸ்பூன்
கடலை எண்ணெய் - பொரிக்க
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - ரெண்டு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கொத்து
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
பிரட்டு தூள் - ஒரு கப்
கட்லெட் செய்யும் முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், வேகவைத்து அரைத்த சிக்கன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுப்பை அணைத்து ஆற விடவும்.
ஆறியதும் உருண்டைகளாக உருட்டி ஹார்ட் வடிவில் தட்டிக் கொள்ளவும்.
பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் கட்லெட் போல பொறுத்துக் கொள்ளவும்.
பூண்டு விழுது செய்யும் முறை
பூண்டை ஆலிவ் ஆயில் சேர்த்து தோலுடன் மிதமான சூட்டில் கடாயில் போட்டு வறுக்கவும்.
ஆறியதும் தோலை உரித்து விழுது போல மசிக்கவும்.
முழு பூண்டை ஆலிவ் ஆயில் ஊற்றி மைக்ரோவேவ் அவனில் வேக வைக்கலாம்.
வெள்ளை சாஸ் செய்முறை
வாணலியில் வைத்து வெண்ணெய் அல்லது மைதாவை நன்கு வறுக்கவும்.
அதில் பாலை ஊற்றி நன்கு கிளறவும்.
தோசை மாவு பதத்திற்கு வந்ததும் உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
அதில் ஒரு வெங்காயம் நறுக்கியது, பிரியாணி இலை, லவங்கம் போட்டு மூடி வைக்கவும்.
கிரீம் கட்லட் செய்யும் முறை
ஒரு வாணலியில் வைத்து ஆலிவ் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
பிறகு வெள்ளை சாஸ் ஊற்றி, பிரஸ் கிரீம் சேர்த்துக் கொள்ளவும் .
அனலை குறைத்து கட்லட் அதன் மீது வைக்கவும்.
பிடித்த மிளகாய்வற்றல், சீசனிங் தூவி அடுப்பை அணைக்கவும்.
சுவையான கிரீம் கட்லெட் தயார்.