காளான் குழம்பு

kuttybabuPPT
0
காளான் குழம்பு

தேவையான பொருட்கள்

காளான் - 300 கிராம் 

வெங்காயம் - ரெண்டு

 தக்காளி - ரெண்டு

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

 தனியா - ஒரு தேக்கரண்டி

 சீரகம் - முக்கால் தேக்கரண்டி

 சோம்பு - அரை தேக்கரண்டி 

பட்டை -  இரண்டு 

இஞ்சி -  துண்டு 

கிராம்பு, ஏலக்காய் - தலா 2 

காய்ந்த மிளகாய் - ஐந்து

 தேங்காய் - கால் மூடி எண்ணெய்

 உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி இலை - தேவையான அளவு

 செய்முறை 

முதலில் ஒரு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

 வாணிலையில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் தனியா, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்ததும் வெங்காயம் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும் .

அடுத்ததில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

 தக்காளி நன்றாக மசிந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்க ஆரம்பிக்கவும்.

 அனைத்தும் நன்றாக ஆறியதும் அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

 இப்போது காளானை நன்கு கழுவி நீர் இல்லாமல் துடைத்து சற்று பெரிய துண்டுகளாக நிறுத்திக் கொள்ளவும்.

 வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு போட்டு தாளித்தவுடன் வெங்காயம், கருவேப்பிலையை செலுத்தி வதக்கவும்.

 அடுத்ததில் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

 குழம்பு நன்றாக கொதி வந்ததும் காளான் துண்டுகளை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

 குழம்பு திக்கான பதம் வந்து எண்ணெய் பிரிய ஆரம்பித்த உடன் கொத்தமல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
 சூப்பரான காளான் குழம்பு ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)