தேவையான பொருட்கள்
மீன் அரை - கிலோ
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
தனியா தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு ஏற்ப
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
முட்டை - மூணு
செய்முறை
மீனை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும் .
சுத்தம் செய்த பின் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தனியா தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதில் முட்டை அடித்து ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கரைந்ததும் மீன் துண்டுகளை கலவையில் போட்டு எடுத்து பின் எண்ணையில் போட்டு வறுத்து எடுக்கவும்.
சுவையான மீன் ரோஸ்ட் ரெடி.