சோயா பீன்ஸ் தோசை

kuttybabuPPT
0
சோயா பீன்ஸ் தோசை 

தேவையான பொருட்கள் 

சோயா பீன்ஸ் - இரண்டு கப் 

கேரட் - ஒண்ணு 

முள்ளங்கி - ஒன்று

 வெங்காயம் - ஒன்று 

தக்காளி - ஒன்று 

அரிசி மாவு - நான்கு டீஸ்பூன்

 இஞ்சி - தேவைக்கு ஏற்ப 

பச்சை மிளகாய் - 4 ஒரு டீஸ்பூன்

 எண்ணெய் - தேவையான அளவு

 உப்பு - தேவையான அளவு 

செய்முறை

கேரட் முள்ளங்கியை துருவிக் கொள்ளவும்.

 சோயா பீன்சை வெதுவெதுப்பான தண்ணீரில் சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

 தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

 மிக்ஸி ஜாரில் ஊறிய சோயா பீன்சை போட்டு அதனுடன் தோல் நீக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

 அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் அரிசி மாவு, துருவிய கேரட் ,முள்ளங்கி, சீரகம், வெங்காயம், தக்காளி ,உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும் .

அடுப்பில் தோசை கல் வைத்து கல் சூடானதும் சிறிது எண்ணெய் தடவி மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும் .
இப்போது சுவையான ஆரோக்கியமான தோசை ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)