காய்கறி பொரியல் தயார் செய்யும் போது இந்த பொறியியல் பொடியை இறுதியாக தூவி சிறிது நேரம் கிளறி இறக்கினால் சுவை அதிகரிக்கும்.
இதை சூடான சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - அரை கப்
உளுந்து - அரை கப்
தனியா - அரை கப்
கொப்பரை தேங்காய் துண்டுகள் - அரை கப்
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 15
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
செய்முறை
அடிகனமான வாணலியில் கடலைப்பருப்பு, உளுந்து, தனியா, கொப்பரை தேங்காய் ஆகியவற்றை மிதமான தீயில் தனித்தனியாக போட்டு வறுத்துக்கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாயை போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.
இவை அனைத்தும் ஆறிய பின்பு அவற்றை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் .
சூடு ஆறியதும் சுத்தமான ஈரம் இல்லாத பாட்டில்களில் சேமித்து வைக்கவும்.
இதை குளிர் பதனப்பட்டியில் வைக்க தேவையில்லை பொறியியல் தயாரிக்கும் போது காய்கறிகள் வெந்த பின்பு அவற்றின் அளவுக்கு ஏற்றபடி ஒன்னு முதல் மூன்று டீஸ்பூன் வரை இந்த பொடியை சேர்க்கலாம்.